உயர்ந்த கனவு

2019 வருட பிற்பகுதியில் ஒரு நாள்..

ஒரு வேற்றுமொழி திரைப்படத்தை தேர்ந்தெடுத்து, கதையின் நாயகிக்காக பார்த்தே ஆக வேண்டும் என்று முடிவெடுத்தாலும் தன்னுடன் சேர்ந்து என் மகனும் அதை பார்க்கலாமா என்ற சந்தேகத்தை தீர்க்க அதன் முன்னோட்டத்தை பார்த்தேன். அதை குழந்தையுடன் சேர்ந்து பார்ப்பதில் எந்த ஐயமுமில்லை என்ற தீர்மானத்திற்கு பிறகு படத்தை குடும்பாக உட்கார்ந்து பார்க்க ஆரம்பித்தோம் (In Netflix) நான், மனைவி மற்றும் மூத்த மகன்.

படத்தில் சாகச காட்சிகளோ, குழந்தைகள் குதூகலிக்க குத்து பாடல்களோ, குழந்தைள் அவர்களாக பயந்து கண்ணை மூடிக்கொள்ளும் அமானுஷ்ய காட்சிகளோ, அல்லது பெற்றோர்கள் பயந்து அவர்கள் கண்ணை முட முயற்சி செய்யும் விதமான ஆபாச காட்சிகள் ஏதும் இல்லாத ஒரு படம். படம் ஆரம்பம் முதல் ஒரு வித பாஸிடிவ் எனர்ஜியை தருவது போலவே ஒரு உணர்வு. 

படம் முடியும் வரை 6 வயது பையன் (அன்றைய வயது)எந்த வித இடையூறு செய்யாமலும், விளையாடாமலும் பார்த்தான். சொற்ப தமிழ் படங்களை அவன் இவ்வாறு அமைதியாக பார்த்திருந்தாலும் வேற்று மொழி படத்தை அது போல பார்த்தது எனக்கு சற்று ஆச்சர்யமாகத்தான் இருந்தது அன்று. 

படத்தின் கதை என்னவென்று பார்த்தால், லட்சியத்துடன் படித்து தனது கனவை அடைய வேண்டும் என்ற தன்னம்பிக்கையுடன் இருக்கும் ஒரு பெண், தனது காதலனால் அவளது முகம் சிதைக்கப்பட்டு, பின்னர் அந்த கோர முகத்துடன் எப்படி அவள் கனவை அடைந்தாள் என அழகாக கூறியிருக்கும் ஒரு motivational படம்தான் அது. மேற்கூறியவாறு முழுவதும் நேர்மறை எண்ணத்தை தூண்டுகிற காட்சிகள்.

ஒருவழியாக படம் முடிந்து, மாலை நேரத்தில் பூங்காவிற்கு விளையாட கூட்டிச்சென்ற பின் அங்கு விளையாடிக்கொண்டிருக்கும் போது சக குழந்தைகளில் ஒருவன் இவன் (என் மகன்) முகத்தின் மீது மண் தூவ நேரிட்டது. நல்ல வேளையாக கண்ணில் மண் படவில்லையென்றாலும், முகத்தின் மீது இருந்த மண்ணை முழுவதுமாக துடைத்து, சரி செய்து பின் அவனது அழுகையை நிறுத்த கொஞ்சம் காலதாமதமானது. 

சிறுது ஆசுவாசத்திற்க்கு பிறகு, அவனிடம் இப்போ மண்ணெல்லாம் போய்டுச்சா, இதற்கு ஏன் இவ்ளோ அழுகை என கேட்டதற்கு அவன் கூறியது.

"  நாம் மதியம் பார்த்த அந்த படத்துல இப்படித்தான அந்த ஆளு அந்த அக்கா முகத்துல ஏதோ வீசி அந்த அக்கா முகம் ஒரு சைடு புண்ணாகிடுச்சுல பாவம், அத மாதிரி என் முகமும் ஆகிடுமோனு பயந்துட்டேன்ப்பா" 

இவ்வாறு அவன் கூறிய போது அந்த படத்தை அவ்ளோ உள்வாங்கியிருப்பது தெரிய வந்தது. பின்னர் எல்லாம் சரிசெய்து சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்துச்செல்லும்போது வந்த அடுத்த அழுகையுடன் அன்றைக்கான இரவு சாப்பாட்டை அவன் தயவில் வெளியிலேயே முடித்தாகிவிட்டது.

இந்த பதிவுக்கு காரணம் இன்று அந்த திரைப்படத்தின் இரண்டாம் ஆண்டு நாள்னு பார்த்தேன், அதான். அழுகைக்கான காரணத்தை படம் பார்த்து தெரிந்துகொள்ளவும். 

படத்தின் பெயர் "உயரே"... 

கதையின் நாயகியாக "பார்வதி திருவொத்து"

#பானு ரகுநத்தன் 

Comments

  1. Ranu vaiyae avalavu thooram involve panna vachuruku..

    Adra adra sarathuuuu 😁 😂😁😁😂

    ReplyDelete
  2. சிறப்பான பதிவு டா தம்பி குழந்தைகள் எதையும் கண்டுக்காத போல் தெரியும் ஆனால் ஆழமாக கவனிப்பார்கள் பெரியவர்களை விட என்பதற்கு சாட்சி புரிகிறதா

    ReplyDelete

Post a Comment