Posts

Showing posts from April, 2021

உயர்ந்த கனவு

2019 வருட பிற்பகுதியில் ஒரு நாள்.. ஒரு வேற்றுமொழி திரைப்படத்தை தேர்ந்தெடுத்து, கதையின் நாயகிக்காக பார்த்தே ஆக வேண்டும் என்று முடிவெடுத்தாலும் தன்னுடன் சேர்ந்து என் மகனும் அதை பார்க்கலாமா என்ற சந்தேகத்தை தீர்க்க அதன் முன்னோட்டத்தை பார்த்தேன். அதை குழந்தையுடன் சேர்ந்து பார்ப்பதில் எந்த ஐயமுமில்லை என்ற தீர்மானத்திற்கு பிறகு படத்தை குடும்பாக உட்கார்ந்து பார்க்க ஆரம்பித்தோம் (In Netflix) நான், மனைவி மற்றும் மூத்த மகன். படத்தில் சாகச காட்சிகளோ, குழந்தைகள் குதூகலிக்க குத்து பாடல்களோ, குழந்தைள் அவர்களாக பயந்து கண்ணை மூடிக்கொள்ளும் அமானுஷ்ய காட்சிகளோ, அல்லது பெற்றோர்கள் பயந்து அவர்கள் கண்ணை முட முயற்சி செய்யும் விதமான ஆபாச காட்சிகள் ஏதும் இல்லாத ஒரு படம். படம் ஆரம்பம் முதல் ஒரு வித பாஸிடிவ் எனர்ஜியை தருவது போலவே ஒரு உணர்வு.  படம் முடியும் வரை 6 வயது பையன் (அன்றைய வயது)எந்த வித இடையூறு செய்யாமலும், விளையாடாமலும் பார்த்தான். சொற்ப தமிழ் படங்களை அவன் இவ்வாறு அமைதியாக பார்த்திருந்தாலும் வேற்று மொழி படத்தை அது போல பார்த்தது எனக்கு சற்று ஆச்சர்யமாகத்தான் இருந்தது அன்று.  படத்தின் கதை என்னவென்று பார்த