Posts

Showing posts from February, 2021

அழுகையும் சிரிப்பும்...

அழுதுகொண்டே சிரிக்கும் தருணம்தான் எவ்வளவு அழகானது,.. எவ்வளவு ஆழமானது...!!! வாழ்க்கையே அழுவதில்தானே ஆரம்பமாகிறது, அந்த அழுகை தொப்புள்கொடி அறுத்த வலியோ, தாயின் இருட்டிலிருந்து வந்த பிரிவோ என்பதை விட நாம் உயிரோடிருப்பதற்கு சான்றாவதே நிதர்சனம். கனவோ, காதலோ, நட்போ, குடும்பமோ கண்டிப்பாக நாம் அனைவரும் இதுபோல் ஒரு தருணத்தை கடத்திருப்போம். முதல்வரியை படித்தவுடன் நா.முத்துகுமாரின் இந்த வரிகளை உதடுகள் உச்சரிக்கிறதா?? "சிரிப்பு வரும், அழுகை வரும், காதலில் இரண்டுமே கலந்துவரும்" ஆம் ஆனால் அந்த காதல் தன் எதிர்பாலினத்தவரிடம் மட்டும்தான் என்று ஏதும் விதியிருக்கிறதா என்ன? எனக்கு நினைவில் இருக்கும் சில தருணத்தில் மறக்கமுடியாத ஒன்று, பள்ளிப்பருவத்தில் நடந்தது. ஆண்டு விடுமுறையில், தமுக்கம் மைதானத்தில் நடக்கும் சித்திரை பொருட்காட்சியில் நானும் சில நண்பர்களும் மாலை நேர வேலைக்கு செல்வோம். ஏன் அந்த வேலைக்கு சென்றேன் என்பதற்கு காரணம் இருந்தாலும் பிறகு அது ஆண்டாண்டு வழக்கமானது வேறு கதை. அதற்குமுன் என்னதான் வீட்டுக்கு மிக அருகாமையில் இருந்தாலும் இரண்டு மாதம் நடக்கும் பொருட்காட்சிக்கு ஒரு நாள் மட்டுமே