அழுகையும் சிரிப்பும்...

அழுதுகொண்டே சிரிக்கும் தருணம்தான் எவ்வளவு அழகானது,.. எவ்வளவு ஆழமானது...!!!

வாழ்க்கையே அழுவதில்தானே ஆரம்பமாகிறது, அந்த அழுகை தொப்புள்கொடி அறுத்த வலியோ, தாயின் இருட்டிலிருந்து வந்த பிரிவோ என்பதை விட நாம் உயிரோடிருப்பதற்கு சான்றாவதே நிதர்சனம். கனவோ, காதலோ, நட்போ, குடும்பமோ கண்டிப்பாக நாம் அனைவரும் இதுபோல் ஒரு தருணத்தை கடத்திருப்போம். முதல்வரியை படித்தவுடன் நா.முத்துகுமாரின் இந்த வரிகளை உதடுகள் உச்சரிக்கிறதா??

"சிரிப்பு வரும், அழுகை வரும், காதலில் இரண்டுமே கலந்துவரும்" ஆம் ஆனால் அந்த காதல் தன் எதிர்பாலினத்தவரிடம் மட்டும்தான் என்று ஏதும் விதியிருக்கிறதா என்ன?

எனக்கு நினைவில் இருக்கும் சில தருணத்தில் மறக்கமுடியாத ஒன்று, பள்ளிப்பருவத்தில் நடந்தது. ஆண்டு விடுமுறையில், தமுக்கம் மைதானத்தில் நடக்கும் சித்திரை பொருட்காட்சியில் நானும் சில நண்பர்களும் மாலை நேர வேலைக்கு செல்வோம். ஏன் அந்த வேலைக்கு சென்றேன் என்பதற்கு காரணம் இருந்தாலும் பிறகு அது ஆண்டாண்டு வழக்கமானது வேறு கதை. அதற்குமுன் என்னதான் வீட்டுக்கு மிக அருகாமையில் இருந்தாலும் இரண்டு மாதம் நடக்கும் பொருட்காட்சிக்கு ஒரு நாள் மட்டுமே வீட்டிலிருந்து செல்வது வழக்கம்.

அந்த வருடம் எட்டாம் வகுப்பு முடித்து ஆண்டு விடுமுறையில் வேலை பார்த்தது, அதான் முதல் வருமானத்தை பார்த்த வேலையும் கூட. அப்படி ஒரு நாள் வேலையில் இருக்கும் போது அப்படியே அந்த பரந்த மைதானத்தில கைல ஒரு பத்து, இருபது குழந்தைகள் உபயோகிக்கும் வாட்டர் கேனோட அதை, வரவங்க போறவங்கட்ட வேணுமா, வேணுமானு கேட்டு விற்றுகொண்டு இருந்தேன். இரண்டு மாதத்தில் பொருட்காட்சியை கண்டுகளிக்கும் என் வீட்டாருக்கான அந்த நாள்தான் அது என்று அப்போது தெரியாது.

திடிரென ரகு என்று ஒரு கணத்தில் குரலில் ஒருத்தவங்க என்னைய நோக்கி ஓடி வர அடுத்த நொடி யாரென்று நான் கண்டறிய, அவங்களுக்கோ தான் வளர்த்த ஒரு பிள்ளை தான் பொழுதுபோக்கிற்க்கு வந்த அதே இடத்தில் வேலைக்காக வந்திருக்கிறதே என, என்னைக்கண்ட சந்தோஷ சிரிப்பில் கண்ணீர் விட, நானோ என்ன பேச வேண்டும் என்று தெரியாமல் எதையோ பேசி முடித்து அவர்கள் திரும்பி செல்லும்போது கண்ணீருடனான சிரிப்பில் வழியனுப்பி வைக்க அன்றைய நாள் வாழ்நாளில் இன்று வரை ஒரு மறக்க முடியாத நாளாகவும், அந்த அழகான தருணத்தையும் உணர்ந்த நாளாக அமைந்துவிட்டது.

அதன்பின் என் முதல் பையன் பிறந்த தருணமும் அதைப்போலவே ஒரு நிகழ்வுதான்.

இதைப்போல நாம் பார்த்து ரசித்த திரைப்படங்களில் பல காட்சிகளை நாம் கடந்திருப்போம். அதில் சில 👇👇

1. ஒன்று எதிர்பாரத சந்தோஷத்தில் வர சிரிப்பில் சேர்ந்த கண்ணீராக இருக்கலாம், உதாரணத்திற்க்கு சலங்கை ஒலி படத்துல கதாநாயகன் All India Dance festival அழைப்பிதழை பார்த்து அதில் இருக்கும் பெயர்களை ஒன்றன் பின் ஒன்றாக பார்த்து இறுதியில் தன் பெயரை பார்த்த அதிர்ச்சியில் வந்த சிரிப்போடு கண்களில் அந்த அழைப்பிதலை வைத்து அழுவது போல் இருக்கும்.

https://youtu.be/pHEhAh0KHJY

2. எதிர்பார்த்த ஒரு விசயம் எப்போது நிறைவேறும் என் காத்திருந்து நிறைவேற கைகூடி வரும்போது நிறைவேறிவிடாதா என்ற ஏக்கத்தில் வரும் கண்ணீரில் சேர்ந்த சிரிப்பாக இருக்கலாம், இங்கு உதாரணமாக சுந்தரபாண்டியன் படத்தில் கதாநாயகனின் தந்தை என்றைக்கா இருந்தாலும் நீதான் என் மருமகள்னு கதாநாயகியை பார்த்து கூறும்போது வரும் கண்ணீருடன் சிரிப்பு, பிறகு வீட்டுக்கு பின்புறம் சென்று தன் தோழியிடம் சிரித்துக்கொண்டே சந்தோஷத்தை பகிர்வது போல் வரும்.

https://youtu.be/jQrrDJlTIDM

3. கண்ணீரை மறைக்க கஷ்டப்பட்டு வரவழைக்கும் சிரிப்பாக கூட இருக்கலாம், அதற்கு ஷாஜாகான் பட இறுதிக்காட்சி.

https://youtu.be/YAA27CoFo38

இவை நான் உணர்ந்த சில காட்சிகளில் எனக்கு நியாபகத்தில் உள்ள காட்சிகள்தான், இதுபோல உங்களுக்கு ஏதேனும் இருந்தால் பகிருங்கள் பார்க்கலாம், படிக்கலாம், ரசிக்கலாம்.

இறுதியாக சிரிப்பில் வரும் கண்ணீர் இன்பத்தின் உச்சம், கண்ணீரில் வரும் சிரிப்பு துன்பத்தின் உச்சம் என்பதை கூறிக்கொண்டு....

....பானு_ரகுநந்தன்

Comments

  1. அற்புதம் ரகு உண்மையாகவே படிக்க படிக்க நெகிழ்ச்சியா இருக்கு வாழ்த்துக்கள் டா

    ReplyDelete
  2. அற்புதம் ரகு உண்மையாகவே படிக்க படிக்க நெகிழ்ச்சியா இருக்கு வாழ்த்துக்கள் டா

    ReplyDelete
  3. அற்புதம் ரகு உண்மையாகவே படிக்க படிக்க நெகிழ்ச்சியா இருக்கு வாழ்த்துக்கள் டா

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. சிரிப்பில் வரும் கண்ணீர் இன்பத்தின் உச்சம், கண்ணீரில் வரும் சிரிப்பு துன்பத்தின் உச்சம்...

    Nice...

    ReplyDelete
  7. Appriciate raghu .... You wrote the reality without. Any makeup. .. Looking forward more in future

    Loads of love

    Akka

    ReplyDelete

Post a Comment